1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala gets tv, bed, newspaper in prision

சசிகலாவிற்கு சிறை அதிகாரிகள் அளித்த சலுகைகள் என்ன தெரியுமா?

Sasikala
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சில சலுகைகளை அளிக்க சிறைத்துறை அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை அடுத்து சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. தனக்கு முதல் வகுப்பு சிறை வேண்டும் என சசிகலா தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், நீதிபதிகள் அவருக்கு எந்த சலுகையும் அளிக்கவில்லை.
 
இந்நிலையில், அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி. தினகரன்  நேற்று பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். 
 
இதனையடுத்து, சசிகலாவிற்கு சில சலுகைகளை அளிக்க சிறை அதிகாரிகள் முன் வந்துள்ளனர். சசிகலாவும், இளவரசியும் தற்போது ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு தொலைக்காட்சி, கட்டில், மின்விசிறி, செய்தித்தாள் போன்றவற்றை வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
அதேபோல், அவர்களை பெங்களூர் சிறையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்றக்கோரியும் விரைவில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற விட மாட்டோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது..
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
ஆம்புலன்ஸ் தராததால் மகளின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற தந்தை..