புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (10:48 IST)

கனவில் பேசும் நடராஜன் - தூக்கம் வராமல் தவிக்கும் சசிகலா

தனது கணவர் நடராஜனின் மரணத்தை தாங்க முடியாமல் சசிகலா தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். 
 
ஏற்கனவே சிறைவாசம், கட்சி மற்றும் ஆட்சி கைவிட்டுப் போனது, குடும்பத்திற்குள் மோதல் என துக்கத்தில் இருந்த சசிகலாவிற்கு, நடராஜனின் சொத்துக்களை பங்கிட்டு கொள்வதில் நடராஜனின் உடன் பிறந்த உறவினர்களுக்கும், சசிகலா உறவினர்களுக்கும் இடையே எழுந்த மோதல் மேலும் சோகத்தை ஏற்படுத்தியதாகவும்,  மன உளைச்சல் அடைந்த சசிகலா, பரோல் முடிவதற்கு முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் செய்தி வெளியானது.

 
இந்நிலையில், தூக்கம் வராமல் சசிகலா தவித்து வருவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இரவு நேரங்களில் திடீரென முழித்துக்கொள்ளும் சசிகலா, அதன்பின் தூங்காமல் வீட்டிற்குள்ளேயே உலவிக் கொண்டிருக்கிறாராம். அவரது உறவினர்கள் கேட்டால், ‘தூக்கம் வரவில்லை. தூங்கினால் அவர் நினைவாகவே இருக்கிறது. அவர் கனவில் வந்து சோகமாக பேசுகிறார்’எனக் கூறுகிறாராம். 
 
நடராஜன் இருந்தவரை எல்லா விவகாரங்களிலும் சசிகலாவிற்கு அவர்தான் வழிகாட்டியாக செல்பட்டுவந்தார். அவரிடமே எல்லா ஆலோசனைகளையும் சசிகலா கேட்டு வந்தார். தற்போது அவர் மரணமடைந்துவிட்டதால், அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சசிகலா தவித்து வருகிறாராம். உறவினர்கள் அவருக்கு ஆறுதலும், சமாதானமும் கூறி வருகிறார்களாம்.