1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (07:42 IST)

பரோலில் வெளியே வந்திருக்கும் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு

கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோலில் வெளியே வந்திருக்கும் சசிகலாவிற்கு திடீரென் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த சசிகலாவின் கணவர் ம.நடராஜன் மார்ச் 20-ந் தேதி காலமானார்.  அவரின் உடல் பெசண்ட்நகரில் உள்ள அவரின் வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.
 
கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது.
இந்நிலையில் தஞ்சையில் தங்கியிருக்கும் சசிகலாவிற்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிகலா நலமுடன் உள்ளார். அவரது உடல் சோர்வாக காணப்படுகிறது என்றனர். ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்றனர்.
 
இதனால் சசிகலாவை யாரும் சந்திக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அங்கிருந்த நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.