1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (19:23 IST)

என்ன ஆனது சசிகலாவிற்கு? வீட்டிற்கு விரைந்த டாக்டர்கள்...

சசிகலா தனது கணவர் நடராஜன் மரணத்திற்கு பிறகு, அவரது இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.  
 
தஞ்சாவூரில் வீட்டில் உள்ள சசிகலா, மாடியில் உள்ள கணவர் நடராஜனின் அறையில்தான் தங்கியிருக்கிறாராம். அவரை சந்திக்க தினமும் பலர் வருகிறார்களாம். காலை மாலை என வருபவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் சசிகலா. 
 
ஆனால், இன்று சசிகலா யாரையும் சந்திக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் வீடு இருக்கும் பகுதி பரபரப்பு இன்றி காணப்பட்டதாம். மேலும், டிடிவி தினகரன் 11 மணிக்கு மேல் வந்து பார்த்துவிட்டு சென்றாராம்.
 
இந்நிலையில் சசிகலாவிற்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி பிரச்னை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட திவாகரன் தன் மனைவியோடு வந்த சசிகலாவை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார். எப்போதும் அனைவரையும் சந்தித்து பேசிக்கொண்டே இருப்பதால், ஓய்வு இல்லாமல் இப்படி ஆகியிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.