1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (16:56 IST)

சசிகலா அதிமுகவிலேயே இல்லையே… எடப்பாடி பழனிச்சாமி பதில்!

சசிகலா அதிமுகவிலேயே இல்லையே… எடப்பாடி பழனிச்சாமி பதில்!
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று பேசிய ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் கட்சியை காப்பாற்றா தான் வருவதாய் சசிக்கலா பேசியுள்ளதாக வெளியாகியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ‘சசிகலா அதிமுகவிலேயே இல்லை. தேர்தலின் போதே அவர் அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்து விட்டார். அவர் அமமுக தொண்டர்களிடம் ஏதோ பேசியுள்ளார்’ எனக் கூறியுள்ளார். சென்னையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்துக்கு ஓபிஎஸ் வராதது குறித்து அவர் வீடு மாறியுள்ளதால் வர இயலவில்லை எனக் கூறியுள்ளார்.