வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மே 2021 (12:51 IST)

சசிக்கலா ஒதுங்கியிருந்தால்தான் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடையும்! – கே.பி.முனுசாமி!

அதிமுகவினரிடம் சசிக்கலா போனில் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையான நிலையில் அது அதிமுகவினர் பேசியது அல்ல என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் தொடர்கிறது. இந்நிலையில் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே பூசல் நிகழ்வதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தான் மீண்டும் வந்து அதிமுகவை காப்பாற்றுவதாக பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயற்சிக்கிறார் சசிக்கலா. அதிமுகவினர் யாரும் அவரிடம் பேசவில்லை. அவர் அமமுகவினரிடம்தான் பேசியுள்ளார். சசிக்கலா குடும்பம் அதிமுகவிலிருந்துதான் விலகியிருந்தால்தான் ஜெயலலிதா ஆத்மா சாந்தியடையும்” என அவர் கூறியுள்ளார்.