1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (12:56 IST)

ஓபிஎஸ் இருந்த பங்களாவில் குடியேறும் அமைச்சர் அன்பில் மகேஷ்!

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர மற்ற அனைவரும் அரசு மாளிகையை காலி செய்து வருகின்றனர் 
 
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்பதால் அவர் இருக்கும் வீட்டிலேயே தொடர்ந்து இருக்கலாம் என தமிழக அரசு அனுமதித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சென்னையில் உள்ள புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார். இந்த நிலையில் ஓபிஎஸ் இருந்த அரசு பங்களா தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வீட்டிற்கு அவர் இன்னும் ஒரு சில நாட்களில் குடியேறுவார் என்றும் கூறப்படுகிறது.