திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (19:05 IST)

முதியோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடிய சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதியோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்று 4 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் விடுதலை ஆனார். அவரை முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் சந்தித்தனர்.

இதையடுத்து அவ்வப்போது அதிமுக முக்கிய பிரமுகர்களுடன் சசிகலா போனில் பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது.  அதேபோல் ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும் அவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில்  சசிகலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நியில் சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள  மெர்ஸி ஹோம் சொசைட்டி ஆப் மேரி இமாகுலேட் முதியோர் இல்லத்தில் இன்று கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதில் பங்கேற்ற சசிகலா அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், முதியோர்கள் 150 பேருக்கு அவர் உணவு வழங்கினார்.