செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (16:55 IST)

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விக நிகழ்ச்சிகளுக்கு தடை- பேரிடர் ஆணையம்

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,  இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பல மாநிலங்களுக்குப் பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் சுமார் 50 கும் மேற்பட்டவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி., இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும், அதிகம் கூட்டம்  கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், 100 % தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி பேரிடர் ஆணையம் தற்போது ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில்,  ஒமிக்ரான் பாதிப்பு 57 ஆக இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு   நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.