செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (13:36 IST)

கொண்டாட்டங்களை தள்ளிப்போடுங்கள்: WHO பரிந்துரை!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவுள்ளதால் இதனை உலக நாடுகள் தவிர்க்கும் படியும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்தது என்பதும் படிப்படியாக ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி தற்போது இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவுள்ளதால் இதனை உலக நாடுகள் தவிர்க்கும் படியும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளதாவது, 
 
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். வாழ்க்கையை இழப்பதை விட, நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது சிறந்தது. தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை  விட, தற்போது ஒத்தி வைத்து விட்டு பிறகு கொண்டாடலாம்.