செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (18:56 IST)

டிசம்பர் 24ஆம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

கிறிஸ்மஸ் தின தினத்துக்கு முந்தைய நாளான டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை ஒட்டி டிசம்பர் 24-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விடுமுறையை ஈடுகட்ட ஜனவரி மாதம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.