திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிறித்துவம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:21 IST)

கிறித்துமஸ் தாத்தா எப்படி உருவானார் தெரியுமா...?

கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும், கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும்  ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்.

முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில் தான். மேலும் இவர் 4ம் நூற்றாண்டை சேர்ந்தவர், அதுமட்டும் இல்லாமல் நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர்.
 
டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.
 
16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களை பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது.
 
சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.