புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (11:13 IST)

செஞ்சுரி அடிக்கும் சசிக்கலா ஆடியோ; ஆட்களை தூக்கும் அதிமுக!

சசிக்கலா ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில் சசிக்கலா தொண்டர்களிடம் பேசி வரும் வீடியோ 100ஐ நெருங்கியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிக்கலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சமீபத்திய சட்டமன்ற தேர்தலுக்கு பின் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்தவர்களுடன் சசிக்கலா பேசி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிக்கலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 15 பேரை நீக்கி ஈபிஎஸ்-ஓபிஎஸ் உத்தரவிட்டனர். ஆனால் அதன்பிறகும் கூட சசிக்கலா அதிமுகவினரோடு பேசும் வீடியோக்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் நேற்று அதிமுகவிலிருந்து 5 பேர் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் சசிக்கலா அதிமுகவினரிடம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் “அதிமுக நான்கு பேரின் கட்சியல்ல, தொண்டர்களின் கட்சி. விரைவில் கட்சியை மீட்கும் பணியை முடிப்பேன்” என அவர் பேசியுள்ளார். சசிக்கலாவின் ஆடியோக்கள் 100ஐ நெருங்க உள்ள நிலையில், அவருடன் பேசும் அதிமுகவினரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.