வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூலை 2019 (12:43 IST)

ஊழியரின் கணவர் கொலை வழக்கு - சரவணபவன் ராஜகோபால் இன்று சரண்டர் ஆவாரா ?

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமாக இயங்கிவரும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று சரண்டர் ஆக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தனது ஹோட்டலில் பணி செய்த ஜீவஜோதி என்ற பெண் ஊழியரை மூன்றாவதாக திருமனம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அவரது கணவரனான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தததாக சரவனபவன் உரிமையாளர் ராஜகோபால் மீது 2004-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் செய்த மேல் முறையீட்டில் அவருக்கு 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 2009 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர் குற்றத்தைத் திட்டமிட்டு செய்ததால் இந்த தண்டனை எனக் கூறப்படட்து.  இதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இந்த தண்டனையை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகவேண்டும் என உத்தரவிட்டது.

கெடுதேதியான ஜுலை 7 ஆன நேற்று அவர் நீதிமன்ற விடுமுறைக் காரணமாக சரண்டர் ஆகவில்லை. மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் இன்று அவர் சரண்டர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.