செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (11:18 IST)

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்த உச்சநீதிமன்றம்

ஓட்டல் சரவணபவன் ஊழியரான பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001ஆம் ஆண்டு பிரின்ஸ் சாந்தகுமார் மனைவி ஜீவஜோதி புகார் அளித்தார். இந்த வழக்கில் சரவணபவன் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். பூந்தமல்லி நீதிமன்றம் சரவணபவன் அதிபருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கு அப்பீலுக்கு உயர் நீதிமன்றம் சென்றபோது அவருக்கு ஆயுள்தண்டனை கிடைத்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  சரவணபவன் அதிபர் ராஜகோபால் அப்பீல் செய்திருக்கும் நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளது
 
இதன்படி 2001ம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை  கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம்  உறுதி செய்துள்ளது.
 
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் "சரவணபவன் ராஜகோபாலுக்கு" விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தண்டனையை ரத்து செய்யக்கோரிய ராஜகோபால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு உயர்நீதிமன்றம் அளித்த தண்டனை உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வரும் ஜூலை 7  ஆம் தேதிக்குள் சரணடைய சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது