செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (12:13 IST)

சரவணபவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ரெய்டு – வருமான வரித்துறை அதிரடி!

சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய உணவகங்களிலும் கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பகத்திலும் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் சரவண பவன் மற்றும் அஞ்சப்பர் ஆகிய உணவகங்கள் பலக் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகின்றன. சைவ உணவுப் பிரியர்களுக்கு பிடித்த உனவகங்களாக இந்த உணவகங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில்  இந்த உனவகங்களிலின் அனைத்துக் கிளைகள், இயக்குனர்களின் வீடுகள் மற்றும் கார்பரேட் அலுவலகங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த உணவகங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் வந்ததை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. மேலும் சென்னையின் பிரபல இனிப்பகமான கிராண்ட் ஸ்வீட்ஸ் அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.