ஹிட்லர் படத்தை யாரும் ரசிக்கவில்லையா என்ன?
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் 800 படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 5 மொழிகளில் 800 என்ற பெயரில் படமாக்க உள்ளனர். இந்த படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க, கனிமொழி படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி சபாபதி இயக்க உள்ளார்.
தமிழ் அமைப்புகள் சில, முரளிதரன் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும், ஈழப்போருக்கு எதிராகப் பல கருத்துகளை வெளியிட்டவர் என்றும் குற்றச்சாட்டு வைத்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து பலர் பேசி வரும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
காந்தி படத்தை விரும்பி ரசித்ததை போலத்தான் ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசித்தனர். கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என 800 திரைப்படட்த்திற்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.