வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:19 IST)

ட்ரெய்லருக்காக ட்விட்டர் வந்த விஜய் சேதுபதி! – கமெண்டில் குத்த வைத்த ரசிகர்கள்

நடிகர் விஜய் சேதுபதி “800” படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெய்லர் வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு கமெண்டில் ரசிகர்கள் அட்வைஸ் மழையை பொழிந்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்சினை விஸ்பரூபம் கண்டு வரும் நிலையில் விஜய் சேதுபதி இதுகுறித்து நேரடியாகவோ, சமூக வலைதளத்திலோ எந்த கருத்தோ, விளக்கமோ அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்த கருப்பன் படத்தை இயக்கிய இயக்குனர் பன்னீர் செல்வத்தின் புதிய படமான “ஐஸ்வர்யா முருகன்” என்ற படத்தின் ட்ரெய்லரை தற்போது ட்விட்டர் வாயிலாக விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பதிவின் கமெண்ட் செக்‌ஷனில் வந்த அவரது ரசிகர்கள் பலர் “அண்ணா நீங்க 800 படத்துல நடிக்காதீங்க அண்ணா” என்று அன்பு கோரிக்கைகளை விடுக்க தொடங்கியுள்ளனர்.