ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (14:22 IST)

ஆன்லைன் ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு என நீதிமன்றம் கூறியுள்ளது: சரத்குமார்

ஆன்லைன் ரம்மியை நீதிமன்றங்கள் அறிவுபூர்வமான விளையாட்டு என கூறி இருக்கின்றன என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழக அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் பிறப்பித்தாலும் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுபூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை என்றாலும் பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று தெரிவித்தார். 
 
இதனை சிந்தித்து இந்தியா முழுவதும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு மாநில அரசு மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதற்கு தான் வரவேற்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran