1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:10 IST)

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர்கள் சேர்க்கை: ஆன்லைன் பதிவு எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு வரும் 20 ஆம் தேதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட்டு வருகிறதது.

இந்தச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாதோர் நடத்தும் 12 ஆயிரம்  தனியார் பள்ளிகளில்   உள்ள மொத்த இடங்களில் 25% இடங்களை  ( 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்கள்) ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கூறப்பட்டது.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு  மாணவர்கள் விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர்.  இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் வரும் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.