ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு நேற்று கவர்னர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.
இந்த மசோதாவின் படி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகின்றன. இது போன்ற விளையாட்டு ஈடுபட்டால் மூன்று மாதம் சிறை அல்லது 5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்
சூதாட்டத்தை விளம்பரம் செய்வதற்கு ஒரு ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்க்கும் விதிக்கப்படும்
சூதாட்ட விளையாட்டுகளை வழங்குபவர்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதே நிறுவனம் மீண்டும் தவறு செய்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்
Edited by Siva