செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (18:14 IST)

அதுமட்டும் நடந்திருந்தா இன்னிக்கு நான் முதலமைச்சரா இருந்திருப்பேன்: சரத்குமார்

Sarathkumar
அன்றைக்கு மட்டும் அந்த வசதிகள் இருந்திருந்தால் இன்றைக்கு நான் தான் முதலமைச்சராக இருந்து இருப்பேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 
நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருவொற்றியூரில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் சரத்குமார் நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நலத்திட்டங்களை செய்து வருகிறோம் 
 
ஆனால் அந்த நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் சென்று சேர வைக்கும் மொபைல் போன் சமூக வலைதளங்கள் அன்றைய தினம் இல்லை. அன்றைய தினம் மட்டும் மொபைல்போன் சமூக வலைதளங்கள் இருந்திருந்தால் இன்றைக்கு நான் முதலமைச்சராக இருந்து இருப்பேன் என்று பேசினார்
 
தற்போது நாம் செய்யும் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சரத்குமார் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva