ஆளுநர் கவுரவத்தை குறைக்கும் வகையில் பேசும் அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும்: எச்சரிக்கை அறிவிப்பு
ஆளுநரின் கவுரவத்தை குறைக்கும் வகையில் பேசும் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என ஆளுனர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஜக அல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை மாநில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் ஆளுநர் குறித்து கடுமையான விமர்சனங்களை அமைச்சர்கள் உள்பட பலர் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ஆரிப்கான் இது குறித்து எச்சரிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் ஆளுநர் பதவியை குறைக்கும் வகையில் பேசும் அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
முதலமைச்சரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே அமைச்சர்களை நியமிக்கவோ, நீக்கவோ ஒரு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற நிலையில் அமைச்சரின் பதவி பறிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Mahendran