வியாழன், 3 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (18:17 IST)

பொது இடத்தில் செல்போன் சார்ஜ் செய்தால் டேட்டா திருடப்படுமா? போலீசார் எச்சரிக்கை

mobile
பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர். 
 
ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம் உள்பட பொது இடங்களில் ஏராளமான தங்களுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் செய்து வருவதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் பொது இடங்களில் உள்ள சார்ஜிங் சென்டர்களில் சார்ஜிங் போட வேண்டாம் என ஒரிசா மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மக்கள் பொது இடங்களில் சார்ஜிங் போடுவதால் யுஎஸ்பி கேபிள் வழியாக தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
அது மட்டுமின்றி புதிய வைரஸ்கள் மொபைலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே பொதுமக்கள் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜிங் போட வேண்டாம் என போலீசார் அறிவித்துள்ளனர்
 
Edited by Siva