1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:13 IST)

உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் – சரத்குமார் நம்பிக்கை !

தமிழக அரசியல் தளத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாத சமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சி இருப்பதையே மறந்துவிட்ட மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்க நடிகர் சரத்குமார் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்துவந்த ச.ம.க. இப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அதன் தலைவர் நடிகர் சரத்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.