1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (22:16 IST)

சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை: சரத்குமார்

சூர்யா சமீபத்தில் கூறிய புதிய கல்விக்கொள்கை குறித்த கருத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்களும், சீமான், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வரவேற்ற நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். 
 
சென்னையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றின் விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
புதிய கல்விகொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மேலும் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான பணியில் ஈடுபட்டிருந்ததால், புதிய கல்விக்கொள்கை பற்றிய கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை. கல்விக் கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் போன்ற பலரின் முயற்சிகள் இருப்பதாக நினைக்கின்றேன். கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக படித்ததும், எனது கருத்தினை ஒரு வாரத்தில் தெரிவிக்கின்றேன்' என்று சரத்குமார் தெரிவித்தார்