வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (10:53 IST)

சசிக்குமார் & சரத்குமார் காம்போவில் நாநா – கலக்கலானப் போஸ்டர்

சசிக்குமார் மற்றும் சரத்குமார் நடிப்பில் புதிதாக நா நா எனும் படம் உருவாகி வருகிறது.

சசிக்குமார் நடிப்பில் நாடோடிகள் 2, கென்னடி கிளப், என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்கள் ரிலிசுக்குத் தயாராக உள்ளன. இந்நிலையில் அவர் சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதற்கு நா நா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்தப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பை ஆகியப் பகுதிகளில் நடக்க இருக்கிறது.