செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (09:38 IST)

நீ ஆம்பளையா இருந்தா? - ஹெச்.ராஜா மீது எகிறிய சரத்குமார்

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்துக்கு பல தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 
ஹெச். ராஜா  தனது டிவிட்டர் பக்கத்தில் “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே” எனப் பதிவிட்டுள்ளார்.   
 
ஹெச்.ராஜாவின் இந்த பதிவு திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. இது மிகவும் கீழ்த்தரமான பதிவு என அவருக்கு எதிராக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 
இந்நிலையில், இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் “ ஹெச்.ராஜா போல ஒரு தரம் கெட்ட அரசியல்வாதியை நான் பார்த்ததில்லை. அவரைப் போலவே பாஜகவும் தரம் தாழ்ந்து விட்டதா என தெரியவில்லை. நீ ஒரு ஆம்பளையாக இருந்தால் என் குடும்பத்தை பற்றி பேசிப்பார். அப்போது நான் யார் என தெரியும்” என கோபமாக பேசினார்.
 
ராஜா நாவை அடக்கிப் பேச வேண்டும். இல்லையெனில், அதற்கான விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி வரும். அவர் மீது பாஜக இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.