ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (18:01 IST)

குஷ்புவுக்கு சரியாக தமிழ் வராது: ‘பிச்சை’ சர்ச்சை குறித்து வானதி சீனிவாசன்

நடிகை குஷ்பு மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து பேட்டி அளித்தபோது மகளிர்களுக்கு பிச்சை போட்டால் உடனே ஓட்டு போட்டு விடுவார்கள் என்று எண்ணக்கூடாது என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் குஷ்புவின் புகைப்படங்கள் எரிப்பது செருப்பால் அடிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது என்பதும் குஷ்புவின் இந்த பேச்சுக்கு பல அரசியல் பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் குஷ்பு ஏற்கனவே இதற்கு விளக்கம் அளித்த நிலையிலும் தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பாஜக தலைவர் வானதி சீனிவாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார், அவர் இது குறித்து கூறிய போது குஷ்பூ வேறு மொழி பேசுபவர் என்பதால் அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் கூறியிருப்பார், அந்த வார்த்தையில் குறை சொல்ல எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார் 
 
ஆனால் குஷ்பு பல பேட்டிகளில் தமிழை தெளிவாக பேசி வருகிறார் என்றும் பிச்சை என்பதன் அர்த்தம் தெரிந்துதான் அவர் பேசியிருப்பார் என்றும் அவருக்கு தொடர்ந்து கண்டனங்கள் புரிந்து வருகிறது.
 
Edited by Mahendran