1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (13:51 IST)

சரத்குமார், ராதிகாவுக்கு சிறப்பு மரியாதை கொடுத்த பிரதமர் மோடி.. குமரி வீடியோ வைரல்..!

நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சமீபத்தில் பாஜகவுடன் இணைந்த நிலையில் இன்று குமரியில் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பு மரியாதை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரதமர் மோடி இன்று குமரியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த நிலையில் பிரம்மாண்டமான மேடையில் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது அரசியல் கட்சியை பாஜகவுடன் இணைக்க முடிவு எடுத்த சரத்குமார் இன்று தனது மனைவி ராதிகாவுடன் குமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி மேடைக்கு வரும்போது வரிசையாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வணக்கம் சொல்லி வந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கும் வழக்கமான வணக்கத்தை தெரிவித்தார்.

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சரத்குமார் மற்றும் ராதிகாவை அழைத்து வந்து பிரதமர் மோடிக்கு அறிமுகப்படுத்திய நிலையில் சரத்குமாரின் கையை பிடித்துக் கொண்டு அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல் ராதிகாவுக்கும் கும்பிட்டு தனது வணக்கத்தை செலுத்தினார். இது குறித்த வீடியோவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran