திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2024 (14:38 IST)

கண் திறந்த காவல் தெய்வம் சங்கிலி கருப்பு சிலை.. ஆச்சர்யத்தில் உறைந்து போன கிராமம்!

Sangili Karuparayan
ஈரோட்டில் உள்ள குலசாமி கோவில் ஒன்றில் இருந்த சாமி சிலை கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதியில் பழமை மிக்க சங்கிலி கருப்பராயன் கோவில் ஒன்று உள்ளது. பாழடைந்த அந்த கோவிலை சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் புணரமைத்து புதிய சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை பக்தர்கள் வழக்கம்போல வந்து சங்கிலி கருப்பராயரை வணங்கிவிட்டு சென்ற நிலையில் மறுநாள் காலை சங்கிலி கருப்பராயர் சிலையின் கண்கள் திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.


இதை கண்டு பக்தர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்த நிலையில் இந்த தகவல் காட்டுத்தீ போல சுற்றி உள்ள பல ஊர்களிலும் பரவியுள்ளது. அதை தொடர்ந்து சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் கண் திறந்த கருப்பராயன் சிலையை காண அப்பகுதிக்கு வந்த வண்ண உள்ளனர்.

இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலிலும் சிலை கண் திறந்த சம்பவம் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K