திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (14:15 IST)

கஞ்சா விற்றதை போலீசுக்கு தகவல் கொடுத்தவர் கொலை.. ஈரோடு பகுதியில் ஒரு அதிர்ச்சி தகவல்..!

கஞ்சா விற்றதை போலீசுக்கு தகவல் தெரிவித்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் லாரி ஓட்டுனராக இருந்த நிலையில் அவரது நண்பர் சசிகுமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது 
 
சசிகுமார் கஞ்சா விற்றது தொடர்பாக விக்னேஷ் ரகசியமாக போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் இதை சசிகுமார் அறிந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதனை அடுத்து விக்னேஷை தனியாக அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதை தலைக்கேறியவுடன் அறிவாள் மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளார் 
 
அதனை அடுத்து விக்னேஷ் சடலத்தை புதைத்து விட்டு தலைமுறைவானார். இந்நிலையில்  சசிகுமார் மீது சந்தேகப்பட்டு போலீசார் அவரை நெருங்கிய நிலையில் அவரே சரணடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran