திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாசப் படம்: ஹேக்கர்கள் கைவரிசை..!
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலின் பேஸ்புக் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்து அதில் ஆபாச புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த பக்கத்தை மீட்டு தர வேண்டும் என திருநள்ளாறு தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறில் சனீஸ்வரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அதிகார பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த கோவிலில் நடைபெறும் விழாக்கள் பூஜைகள் புகைப்படங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த நிலையில் திடீரென நடந்த சில நாட்களாக அந்த பேஸ்புக் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அந்த புகைப்படங்களை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து கோவில் நிர்வாகம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளது.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஹேக்கர்கள் இந்த பக்கத்தை ஹேக் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் பக்கத்தை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva