1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. saidai duraisamy son accident rescue operation continue

ஆற்றில் கிடைத்த மனித உடல் பாகம்.. வெற்றி துரைசாமி உடலா? என டி.என்.ஏ டெஸ்ட்..!

சைதை துரைசாமி
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல நிலையில் அங்குள்ள நதி ஒன்றில் அவர் சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளானது. .

இந்த விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் அவருடைய நண்பர்கள் படு காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இன்னும் கிடைக்கவில்லை என்பதால் அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.

சைதை துரைசாமியின் மகனை என்.டி.ஆர்ப், ஐடிபிபி, ஊர்க்காவல் படை, காவல்துறையினர் உள்ளிட்டோர் தேடி வரும் நிலையில் தற்போது நதியில் மனித உடல் பாகம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித உடலின் பாகத்தை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சோதனையின் முடிவுக்கு பின்னர் கூடுதல் விவரங்கள் தெரியும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து மீட்பு பணியில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
ஜேபி நட்டா, அண்ணாமலை கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பா? தமிழக அரசு அதிரடியா?