1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:53 IST)

எமனாக மாறிய கார்.! உயிரைப் பறித்த கொடூரம்..! தீயில் கருகிய வாலிபர்.!!

car fire
தர்மபுரி-பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையில் கொண்டிருந்த  கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரில் இருந்த நபர் தீயில் சிக்கி பரிதாபமாக  உயிரிழந்தார்.

தர்மபுரி-பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில்   சோமனஅள்ளி அருகே கசியம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பக்க பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரில் வந்தவர் காரிலிருந்து இறங்குவதற்கு முன்பு கார் முழுவதும் தீ பற்றி எரிந்தது.   

வேகமாக பரவிய தீயின் காரணமாக கார் முழுவதும் எரிந்து சேதமானது. காரினை ஓட்டி வந்தவர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
police station
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு தீயைணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,  தீப்பற்றி எறிந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் முரளி என்பது தெரியவந்தது.

 
தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.