ஆனந்தகுமார்|
Last Modified சனி, 14 செப்டம்பர் 2019 (13:44 IST)
காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு கரூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவிரி நதிக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார்.
இந்த இயக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரி முதல் சென்னை வரை மோட்டார் சைக்கிளில் சத்குரு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 3ம் தேதி தலைக்காவிரியில் புறப்பட்ட அவர், பல்வேறு இடங்கள் சென்று விழிப்புணர்வு பேரணி இன்று கரூர் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பொது மக்களிடம் பேசிய அவர் கரூர் மக்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு காவிரி என்று பெயர் வைக்க வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்நிகழ்வில் பா.ம.க முன்னாள் சட்ட பேரைவை உறுப்பினர் மலையப்பசாமி கலந்து கொண்டார்