செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (13:41 IST)

அரசு நிகழ்ச்சியில் பேனர்... உடனடியாக அகற்றச்சொன்ன அமைச்சர்கள்

விருதுநகரில் நடந்த அரசு விழா ஒன்றில் பேனர்கள் வைத்ததால், அதனை உடனடியாக அகற்றச்சொல்லி அதிமுக அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து இறந்த செய்தி தமிழகத்தையே உழுக்கியது. இதை குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த அரசு விழா ஒன்றில் அதிமுக அமைச்சர்களான கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் செல்லூர் ராஜு ஆகியோருக்கு பேனர்கள் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த விழாவுக்கு வந்த அமைச்சர்கள் அந்த பேனரை உடனடியாக அகற்றச் சொல்லி உத்தரவிட்டனர்.

இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஒரு ஆர்வ மிகுதியால் வைத்துவிட்டனர். ஆனால் நாங்கள் அந்த பேனர்களை எல்லாம் அகற்றினால் தான் விழாவில் கலந்துகொள்வோம் என கூறிவிட்டோம்” என்று ஒரு ஊடக தொலைக்காட்சிக்கு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.