புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (12:32 IST)

டிசம்பர்லயே தம்பிக்கு இப்படி ஆச்சே? – சீமானை கலாய்க்கும் எஸ்.வி.சேகர்!

ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக சீமான் கூறியதற்கு கிண்டல் செய்யும் தோனியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”ஜெயலலிதா என்னிடம் ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து நிறைய பேசினார். மேலும் ஹிலாரி க்ளிண்டனை சந்தித்தபோது ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து 45 நிமிடங்கள் பேசியதாக என்னிடம் தெரிவித்தார்.” என்று பேசினார்.

ஏற்கனவே பிரபாகரனை சந்தித்தது, கலைஞர் குறித்து பேசியது என சீமான் கூறியவற்றிற்கு ஆதாரம் இல்லை என பலர் பேசி வரும் நிலையில், இதையும் அந்த கோணத்திலேயே சிலர் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் சீமானின் இந்த பேச்சை கிண்டல் செய்யும் வகையில் ஒருவர் ட்வீட் போட அதை ரீட்வீட் செய்த பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ” இதுவரைக்கும் உயிரோட இருக்கறவங்க கிட்ட பேசின தவகவலே இல்லயே ஆவி உலக தம்பியிடம். Great. டிசம்பர்லியே இப்படீன்னா மே மாசம் இன்னொரு அருணன்” என்று கிண்டல் செய்யும் தோனியில் பதிவிட்டுள்ளார்.