புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (10:40 IST)

உண்மையை சொன்னால் எடப்பாடி ஒத்துக்கமாட்டார்! – ஸ்டாலின்

நிர்பயா பெண்கள் பாதுகாப்பு நிதியை எடப்பாடி பழனிசாமி முறையாய் பயன்படுத்தவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க நிர்பயா பெண்கள் நிதி உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் இந்த நிதியை பெண்கள் பாதுகாப்புக்கு செலவளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட 190 கோடி நிதியில் வெறும் 6 கோடியை மட்டுமே அதிமுக அரசு செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் அரசு மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி திறமை போதாது. இதை நான் சொன்னால் ஸ்டாலின்  அரசியல் செய்கிறார் என கூறுவார் என்றும் தெரிவித்துள்ளார்.