செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (12:00 IST)

அனுமதியின்றி போராடினால் அப்புறப்படுத்துங்கள்.. டிஜிபிக்கு உத்தரவு

சிஏஏ தொடர்பாக அனுமதியின்றி போராடினால் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே பல போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இப்போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதனிடையே திருப்பூரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.