1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:32 IST)

என்னை கைது செய்ய வேண்டுமா? ஸ்டாலினுக்கு இது கூட தெரியாதா? - வி.சேகர் கேள்வி

தன்னை கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்து பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். 
 
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் “ஒரு போலீஸ் அதிகாரியை விமர்சித்தது குற்றம் என்றால், ஒட்டுமொத்த காவல்துறையையும், உயர்நீதிமன்றத்தையும் மிக மோசமாக விமர்சித்த ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?
 
அதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு ஏன் கைது செய்ய தயக்கம் காட்டி வருகிறது?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அதோடு, கருணாஸுக்கு ஒரு சட்டம், திரு எச்.ராஜா மற்றும் திரு எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அ.தி.மு.க அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது என அவர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.வி.சேகர் “நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தபின், அதே குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்பது சாதாரண பாமர மனிதர்களுக்கே தெரியும். ஆனால், ஸ்டாலினுக்கு தெரியவில்லை. பாஜகவின் மீதான காழ்ப்புணர்ச்சி அவர் கண்ணை மறைப்பதே இதற்கு காரணம்” என அவர் தெரிவித்தார்.