திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:07 IST)

தீராத அன்பு - முதலமைச்சருக்கு கோவில் கட்டிய போலீஸ்காரர்

தெலுங்கானாவில் போலீஸ்காரர் ஒருவர் முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு கோவில் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரரான சீனிவாசலு சாட்டப்பல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
 
காவலர் சீனிவாசலு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் மீது தீராத அன்பு கொண்டவர். அவரின் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டதன் காரணமாக அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார் சீனிவாசலு.
அதன்படி சீனிவாசலு தனது நிலத்தில் 2 லட்சம் ரூபாய் செலவில் சந்திரசேகராவிற்கு கோவில் கட்டியுள்ளார். அதனை முதலமைச்சரே திறந்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.