1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:24 IST)

ஒரே மேடையில் ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின், தினகரன்! என்ன ஆகுமோ?

ஒரே மேடையில் ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின், தினகரன்! என்ன ஆகுமோ?
கடந்த சில மாதங்களாகவே அதிமுக தலைவர்களும், தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சொற்போரில் ஈடுபட்டு வருவதால் அவ்வப்போது சமூக இணையதளங்கள் பரபரப்பாகி வருகின்றன. சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட ஒரே ஆளாக தினகரன், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஈடுகட்டும் வகையில் பேசி வந்தார்.

இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி நடைபெறும் விழா ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின் ஆகிய நால்வரும் கலந்து கொள்ளவுள்ளனர். ஆம், செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நிறைவு விழா நடைபெறவுள்ளது.

ஒரே மேடையில் ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின், தினகரன்! என்ன ஆகுமோ?
இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை உரையும், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை உரையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விழா பேருரையும், டிடிவி தினகரன் வாழ்த்துரையும், மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையும் வழங்கவுள்ளனர். மேலும் இந்த விழாவில் கனிமொழி எம்பி, தம்பிதுரை எம்பி, உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். ஒரே மேடையில் எதிரும் புதிருமாக உள்ள கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவிருப்பதால் இந்த விழாவில் என்ன நடக்குமோ? என்ற ஆவல் அதிகரித்துள்ளது.