திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (10:58 IST)

சர்கார் முதல் பாடல்! சூப்பர் தகவலை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. 
ஏ. ஆர்.முருகதாஸின் பிறந்தநாளான இன்று சர்க்கார் படத்தின் ஒரு பாடல் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அந்தப் பாடலின் முதல் வார்த்தையை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஏ.ஆர். ரகுமானின் ஃபோக் ஸ்டைல் இசையில் சிம்டாங்கரன் என்று தொடங்கும்  அந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர்  2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடைபெற உள்ளது.