திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 6 நவம்பர் 2017 (09:57 IST)

கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார் கமல் - எஸ்.வி.சேகர் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் ஒரு மூன்றாம்தர அரசியல்வாதி போல் நடந்துகொள்கிறார் என நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “ கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறார். இந்து தீவிரவாதம் என்ற ஒன்று இல்லை. இது அவரின் கற்பனை. ஒருவேளை ஹாசன் என பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ அவருக்கு இந்துக்களுக்கு எதிரான மனப்பான்மை வந்து விட்டது என நினைக்கிறேன். 
 
கேரளாவுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு தமிழகம் ஒன்றும் தாழ்ந்து போய்விடவில்லை. கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் அங்கேயே சென்று வாழட்டும்.  இந்துமதம் பற்றி தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் அவர் கரண்ட் பெட்டிக்குள் கை வைக்கிறார். அதன் விளைவு விபரீதமாக இருக்கும்” எனக் கூறினார்.