திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (18:36 IST)

கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுமா விடுதலைச்சிறுத்தைகள்: திருமாவளவன்

நடிகர் கமல்ஹாசன் இன்று ரசிகர்களிடையே பேசியபோது அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும், கட்சி ஆரம்பிக்க முதலில் நிதி சேர்ப்பதற்காக வரும் 7ஆம் தேதி செயலி ஒன்றை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


 


இந்த நிலையில் கமல்ஹாசனின் அதிகாரபூர்வ அரசியல் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை ஏற்கனவே ஆதரித்த திருமாவளவன், கமலின் இந்த முடிவு குறித்து கருத்து கூறியபோது, 'அரசியலுக்கு வரும் கமல்ஹாசனின் முடிவை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

விளிம்புநிலை சமூகத்தினரின் நலனுக்காக அரசியல் கட்சியை தொடங்குவர் எனில் வரவேற்போம். கமல்ஹாசனின் கொள்கை, கோட்பாடுகளை பொறுத்தே இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்  என்று திருமாவளவன் கூறியுள்ளார்.