திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (17:16 IST)

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடைவிதிக்க வேண்டும் - திருமா மனு தாக்கல் !

ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது  பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும் என்று  வி.சிக.,. தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.
 

தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அணுவகுப்பு   ஊர்வலம நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு  சமீபத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம், பல்வேறு  நிபந்தனைகளுடன் அன்று அணிவகுப்பு ஊவலத்திற்கு அனுமடி அளிக்க காவதுறைக்கு உத்தரவிட்டது.

இந்த  உத்தரவை திரும்பபெற வேண்டுமென  வி.சி.க தலைவர் திருமாவளனன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில்,  ‘’பாஜக விளம்பரத்திற்காக தங்கள் வீடுகளில் குண்டுகள் வீசி வரும் சம்பவங்கள்  நடந்துவரும் சூழலில், ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது  பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும்   என்பதால், மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு காந்தி   ஜெயந்தி அன்று அனுமதி வழங்கக்கூடாது ‘’என்று தெரிவித்துள்ளார்.