திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:34 IST)

ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !

hijab33
ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை  வரும் செப்டம்பர் மதம் 5 ஆம் தேதிக்கு உச்ச  நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு குறித்து இஸ்லாம் மாணவியர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு  மனுதாக்கல் செய்தனர். இந்த மேல் முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஹேமந்த் குப்தா, சுனான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரரணைக்கு வந்தது.

அப்போது, கர்நாடக அரசு பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்தது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென நீதிபதிகள்   நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை  வரும் செப்டம்பர் மதம் 5 ஆம் தேதிக்கு உச்ச  நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.