ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:48 IST)

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

supreme court
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது 
 
இதனை அடுத்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இதுவரை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராத நிலையில் அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என ஆர்எஸ்எஸ் கூறியிருந்தது. 
 
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்தால் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran