ஆர்.ஆர்.ஆர் முதல் காஷ்மீர் ஃபைல்ஸ் வரை! – தாதாசாகேப் பால்கே விருதுகள்! முழு விவரம்!
இந்திய திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் திரைப்படங்களை முதன்முதலாக உருவாக்கிய இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் பல்வேறு பிரிவுகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழு விவரம்:
-
சிறந்த திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ்
-
சிறந்த இயக்குனர் : ஆர்.பால்கி (சுப்: ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்)
-
சிறந்த நடிகர் : ரன்பீர் கபூர் (பிரம்மாஸ்திரா)
-
சிறந்த நடிகை : ஆல்யா பட் (கங்குபாய் கதியவாடி)
-
சிறந்த நம்பிக்கை நடிகர் : ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
-
சிறந்த துணை நடிகர் : மனிஷ் பால் (ஜக்ஜக் ஜீயோ)
-
சிறந்த வெப் சிரிஸ் : ருத்ரா: தி எட்ஜ் ஆப் டார்க்னஸ்
-
ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் : ஆர் ஆர் ஆர்
-
சிறந்த பிண்ணனி பாடகர் : சாசெட் தந்தோன் (மய்யா மைனு)
-
சிறந்த பாடகி : நீத்தி மோகன் (மேரி ஜான்)
-
சிறந்த ஒளிப்பதிவாளர் : பி எஸ் வினோத் (விக்ரம் வேதா)
-
இசை துறையில் சிறந்த பங்களிப்பு : பாடகர் ஹரிஹரன்
Edit by Prasanth.K